| 245 |
: |
_ _ |a சாளுவன் குப்பம் யாளிக் குகை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a அதிரணசண்ட பல்லவேஸ்வரக் குடைவரைக்குத் தெற்கில் அமைந்துள்ள புலிக்குடைவரை அல்லது யாளிக் குகை என்று அழைக்கப்படும் இக்குடைவரைக் கோயில் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய மேடை போன்று அமைந்துள்ளது. கடற்கரையை நோக்கியவாறு கிழக்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபம் பூமிமட்டத்திலிருந்து சுமார் 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மேடையை அடைய முன்புறமாகப் பாறையில் அமைக்கப் பட்டுள்ள நான்கு படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். இப்படிகளின் இருபுறமும் கைப்பிடிகள் அமைந்துள்ளன. இதனையொட்டி இருபுறமும் சிங்கத்தின் உருவமும் அதிட்டான அமைப்பும் உள்ளது. இருபக்கங்களிலும் மிகப்பெரிய முடிவுறாத இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பின்புறக் கால்களை ஊன்றி முன்புறக்கால்களை உயர்த்திப் பாய்வது போன்ற அமைப்பில் இரு சிங்கங்களின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புகளும் உள்ளன. மேற்புறம் உள்ளடக்கியவாறு பாறை செதுக்கப்பட்டுள்ளது. இருபுறமும் பக்கவாட்டிலும் அதே அமைப்பில் இரு கூடுகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் இங்கு அமைய வேண்டிய சிற்ப வேலைப்பாடு முற்றுப்பெறாமல் உள்ளது. மண்டபப்பகுதி முழுவதும் பக்கவாட்டில் உள்ள கோட்டத்தையும் உள்ளடக்கி ஒரு அரைவட்டத்தில் அமைத்து காணப்படுகிறது. பதினாறு யாளிகளின் தலைப்பகுதி உருவங்கள் மட்டும், மாலை போன்று வரிசையாக குடைந்தமைக்கப்பட்டுள்ளது. சிலர் இதை புலி அல்லது சிங்கத் தலை என்பர். இக்குடைவரைக்கு "புலிக்குகை" என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. ஆயின் இவை யாளியின் தலைகளேயாகும். மண்டபத்தில் கருவறை ஏதும் அமைக்கப்படவில்லை. தெற்குப்புறம் இரண்டு யானைகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு மேலே கழுத்தின் அருகில் குதிரைக் குளம்புகள் போன்ற அமைப்பில் இரு கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடுகளின் உட்சுவற்றில் கைகளில் ஆயுதங்களைத் தாங்கிய உருவங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இவை கடற்காற்றினால் சிதைந்து காணப்படுகின்றன. வடக்குப்புறம் ஒரு சிங்கத்தின் தலை செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரை மண்டபம் உற்சவ மண்டபமாகவோ சங்கீதமேடையாகவோ அல்லது அரசர் அமர்ந்து கேளிக்கைகளை கண்டுகளிக்கும் மேடையாகவோ இருந்திருக்கலாம். குடைவரை அருகில் இருக்கும் கல்வெட்டொன்றில் "திருவெழுச்சில்" என்ற சொல் காணப்படுகிறது. "திருவெழுச்சில்" எனில் இறைவன் எழுந்தருளும் இடம் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும். ஆகவே இம்மண்டபம் உற்சவ மண்டபம் அல்லது அரசன் வந்தருளும் இடமாக இருக்கலாம். இது இராஜசிம்மன் காலத்தைச் சார்ந்தது. இக்குடைவரை மற்றும் சிற்பங்கள் முழுவதும் கடற் உப்புக் காற்றால் அரித்து சிதைந்துள்ளன. |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a சாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்ற அமைப்பில் உள்ளது. இங்கே கருவறைகள் எதுவும் இல்லை. இதன் தளம் நிலத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது இத்தளத்தை அடைவதற்கு அதன் முன்புறத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் அதிட்டானம், தூண்கள், கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. எனினும் இவற்றுட் சில அம்சங்கள் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் "திருவெழுச்சில்" என்னும் சொல் காணப்படுவதால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், குகை, குகைக் கோயில், சாளுவன்குப்பம், மாமல்லபுரம், சாளுவங்குப்பம், யாளிக்குகை, புலிக்குகை, அதிரணசண்ட பல்லவேசுவர கிருஹம், இராஜசிம்மன், இராசசிம்மன், குடைவரை, பல்லவர் குடைவரைகள், பல்லவர், தொண்டை நாட்டுக் குடைவரைகள், மத்தியத் தொல்லியல் துறை, இந்திய தொல்லியல் பரப்பாய்வுத்துறை, சங்க கால முருகன் கோயில் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a சாளுவன் குப்பம் யாளிக் குகை |c சாளுவன்குப்பம் |d செங்கல்பட்டு |f மாமல்லபுரம் |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 12.657362161877 |
| 915 |
: |
_ _ |a 80.209288167879 |
| 934 |
: |
_ _ |a சங்க கால முருகன் கோயில், நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரம் |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00117 |
| barcode |
: |
TVA_MON_00117 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0001.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0002.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0003.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0004.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0005.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0006.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0007.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0008.jpg
TVA_MON_00117/TVA_MON_00117_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_யாழிகுகை-0009.jpg
|